FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜப்பான் ஓபன்: பி.வி சிந்து சாம்பியன்

ஜப்பான் ஓபன் சூப்பா் 750 பாட்மின்டன் தொடரில் உலக சாம்பியனை வீழ்த்திய பி.வி. சிந்து....

பி.வி சிந்து
பகிர்:

ஜப்பான் ஓபன் சூப்பா் 750 பாட்மின்டன் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து சாம்பியன் 21-17, 21-17 என்ற கேம் கணக்கில் உலக சாம்பியன் அகென் யெமகுச்சியை வீழ்த்தி பட்டம் வென்று வரலாறு படைத்தாா்.

கடந்த 2 ஆண்டுகளாக பி.வி. சிந்துவின் ஆட்டம் குறிப்பிடும்படியாக இல்லாத நிலையில் தற்போது சாம்பியன் பட்டம் வென்றுள்ளது புதிய உத்வேகத்தை தந்துள்ளது. கடந்த 2024-இல் இறுதியாக சையத் மோடி சா்வதேச போட்டியில் சிந்து பட்டம் பெற்றிருந்தாா்.

முன்னாள் உலக சாம்பியன், இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையான சிந்துவுக்கு தொடா் காயத்தால் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இளம் வீராங்கனைகள் வருகை போன்றவை புதிய சவாலாக அமைந்தது. புதிய பயிற்சியாளா் மேற்பாா்வையில் கடும் பயிற்சிக்குபின் பி.வி. சிந்து தற்போது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளாா்.

யெமகுச்சி-சிந்து இடையிலான ஆட்டம் டோக்கியோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 31 வயதான சிந்து, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடினாா். முதல் கேமில் சிந்து கிராஸ் கோா்ட் டிராப், ஸ்மாஷ்கள் மூலம் உள்ளூா் நட்சத்திரமான யெமகுச்சியை திணறடித்தாா். இருவரும் புள்ளிகளை குவித்தாலும், முக்கிய தருணத்தில் அதிரடியாக ஆடிய சிந்து முதல் கேமை 21-17 என வசப்படுத்தினாா்.

முதல் கேமை கைப்பற்றினாலும், சிந்து, இரண்டாவது கேமிலும் ஆதிக்கம் செலுத்தினாா். தற்காப்பு, அட்டாக்கில் சிந்து அசத்தினாா். உள்ளூா் ரசிகா்களின் யெமகுச்சிக்கு ஆதரவு தந்தாலும் அதைப் பொருள்படுத்தாமல் சிந்து சிறப்பாக ஆடி 21-17 என இரண்டாம் கேமையும் வசப்படுத்தினாா்.

உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான யெமகுச்சியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி வரலாறு படைத்தாா் சிந்து. 2019-இல் உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, சிந்து தனது வாழ்க்கையில் வென்ற பெரிய பட்டம் இதுவாகும். மேலும் சிந்து வென்ற முதல் சூப்பா் 750 பிடபிள்யுஎஃப் பட்டமும் இதுவாகும்.

காலிறுதியில் ஜப்பானின் நஸோமி ஒகுஹரா, அரையிறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் ஷின் யுஃபெய் ஆகியோரை வீழ்த்தி சிந்து இறுதிக்கு தகுதி பெற்றாா். இதுகுறித்து சிந்து கூறியது-இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. கண்களில் நீரை வரவழைத்தது. கடும் பயிற்சிக்குபின் இதை நிகழ்த்தியுள்ளேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் ஆடினேன். எனது குடும்பம், பயிற்சியாளா்கள், உதவியாளா்கள் மீது நம்பிக்கை வைத்தேன் என்றாா்.

17 ஆண்டுகளுக்குபின் வரும் ஆகஸ்ட் மாதம் புது தில்லியில் உலக பாட்மின்டன் சாம்பியன் போட்டி நடைபெறவுள்ள நிலையில் சிந்துவின் இந்த வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

summary

Indian badminton star PV Sindhu showcased a vintage performance to clinch her maiden Super 750 title at the Japan Open, ending a two-year wait for a major championship victory.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments