3 ஆண்டுகளுக்குப் பிறகு... அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து!
இந்திய பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து ஜப்பான் ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து...
ஜப்பான் ஓபனில் இந்திய பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் 750 பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பிவி சிந்து (31 வயது) கடந்த 2019ல் உலக சாம்பியனாக பட்டம் வென்று அசத்தினார். கடைசியாக டென்மார்க் ஓபனில் சூப்பர் 750 பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.
ஜப்பான் ஓபன் காலிறுதியில் பிவி சிந்து உடன் முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹரா மோதவிருந்தார். இவர் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இதனால், பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
Advertisement
Advertisement
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென்கொரிய வீராங்கனை இடதுகால் காயத்தினால் வெளியேற நஜோமி ஒகுஹரா காலிறுதிக்கு வந்திருந்தார். தற்போது, அவருக்கு காயம் ஏற்பட்டு வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
இந்த சீசனில் பிவி சிந்து மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மலேசியா சூப்பர் 1000, ஆஸ்திரேலியா ஓபன் சூப்பர் 500 பிரிவுகளில் முன்னேறியிருந்தார். தற்போது, சூப்பர் 750 பிரிவிலும் முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியன் சென் யுஃபெய் உடன் பிவி சிந்து அரையிறுதியில் மோதுகிறார். இருவரும் மோதிக்கொண்ட 14 போட்டிகளில் சீன வீராங்கனை யுஃபெய் 8 முறையும் பிவி சிந்து 6 முறையும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
முன்னதாக, 2019 சாம்பியன்ஷிப்பில் பிவி சிந்து பட்டம் வென்றபோது அரையிறுதியில் சீன வீராங்கனை யுஃபெய் வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Indian badminton player P V Sindhu enters semis of Japan Open
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.