முகப்பு
செய்திகள்

சிந்து பைரவி தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றம்!

விஜய் தொலைக்காட்சியின் சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடரின் ஒளிபரப்பு நேரத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 29 ஜூன் 2026, 4:23 pm IST
சிந்து பைரவி தொடரின் போஸ்டர் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடரின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு சிந்து பைரவி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நடிகர் திரவியம் நாயகனாகவும் பவித்ரா பி நாயக் நாயகியாகவும் நடித்து வருகின்றனர்.

இவர்கள் மட்டுமின்றி ஆர்த்தி சுபாஷ், ஆனந்த கிருஷ்ணன், சுமலதா மதன், காயத்ரி கிருஷ்ணன், சஹானா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

ஆண்டாள் அழகர், தேன்மொழி பிஏ, சின்ன தம்பி உள்ளிட்டத் தொடர்களை இயக்கிய இயக்குநர் பிரான்சிஸ் கதிரவன் இத்தொடரை இயக்குகிறார்.

கடந்த 2025 - ஜனவரி 20 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரின் ஒளிபரப்பு நேரம் ஏற்கெனவே மாற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குடும்ப போராட்டங்களுக்கு நடுவே மலரும் காதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளதால், அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடர் இனி, திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. மறுஒளிபரப்பு இரவு 10.30 மணிக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

Vijay TVs Sindhu Bairavi Kacheri Arambam serial time changed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments