அரையிறுதியில் தோல்வியுற்ற பிவி சிந்து..! கோப்பைக்கான காத்திருப்பு 2 ஆண்டுகளாக நீடிப்பு!
ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதியில் தோல்வியுற்ற பிவி சிந்து குறித்து...
ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து போராடித் தோல்வியுற்றுள்ளார்.
முன்னதாக, காலிறுதியில் சீன தைபேயின் சென் சூ யுவுடன் பிவி சிந்து 21-6, 21-9 என நேர் கேம்களில் வென்றிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் அரையிறுதிக்குச் சென்றார்.
அகானே யமகுச்சியுடன் பிவி சிந்து இதுவரை 28 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 15 - 13 என்ற சிறப்பான வெற்றியை பிவி சிந்து தன்வசம் வைத்திருக்கிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 29ஆவது முறையாக மோதிய இந்தப் போட்டியில் அகானே யமகுச்சி 22-20, 21-12 என நேர் கேம்களில் வென்றார். பிவி சிந்து - அகானே யமகுச்சி உடன் நேருக்கு நேர் மோதியதில் 15-14 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.
சையது மோடி கோப்பைக்குப் பிறகு (2024) பிவி சிந்து தனது கோப்பைக் கனவு தாமதமாகிக் கொண்டே வருகிறது. இந்தாண்டு மலேசிய ஓபனிலும் பிவி சிந்து அரையிறுதியில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
PV Sindhu loses Australian Open semifinal to Akane Yamaguchi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.