புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!
புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர் குறித்து...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் திரவியம், ஆர்த்தி சுபாஷ், பவித்ரா நாயக், ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்து வருகின்றனர். சகோதரிகளான சிந்து மற்றும் பைரவி இருவரின் திருமண வாழ்க்கையை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
மேலும் இந்தத் தொடரில் அம்பிகா, வாசு விக்ரம், சுமலதா மோகன், காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
பிரான்சிஸ் கதிரவன் இயக்கி வரும் இந்தத் தொடர், கடந்த 2025 - ஜனவரி 20 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. டெலி ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.
சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடர், வரும் 27 ஆம் தேதி முதல் புதிய நேரத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. அதன்படி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வந்த இரவு 7 மணிக்கு, நடிகர் ரஞ்சித் நடிக்கும் புதிய தொடரான தாய் மாமன் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
அதேபோல, மகாநதி தொடர் ஏப். 27 முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The broadcast time for the series Sindhu Bhairavi: Kacheri Arambam, currently airing on Vijay TV, has been changed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.