தாய்லாந்து ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து, லக்ஷயா சென், சாத்விக் - சிராக்!
தாய்லாந்து ஓபன் பாட்மின்டனில் காலிறுதிக்கு முன்னேறிய நான்கு இந்தியர்கள் குறித்து...
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் நான்கு இந்தியர்கள் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்கள். ஆடவர் பிரிவில் லக்ஷயா சென்னும் மகளிர் பிரிவில் பிவி சிந்துவும் முன்னேறியுள்ளார்கள்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் - சிராக் இணையினரும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் வென்று, காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள்.
தாய்லாந்தில் நடைபெற்றுவரும் பாட்மின்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து டென்மார்கின் அமாலி ஷூல்ட்ஸ் உடன் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதினார். இதில், 28 நிமிஷங்களில் பிவி சிந்து 21-13, 21-15 என்ற கேம்களில் வென்றார்.
Advertisement
Advertisement
ஆடவர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற லக்ஷயா சென் சீனாவின் ஷு ஷுவான் சென் என்பவரை 21-12, 21-13 என்ற கேம்களில் 39 நிமிஷங்களில் வென்றார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் - சிராக் இணையினர் மலேசிய இணையினரை 44 நிமிஷத்தில் 21-12, 21-19 என்ற கேம்களில் வென்றார்கள்.
இளம் இந்திய பாட்மின்டன் வீராங்கனை தேவிகா சிஹாக் (20 வயது) தாய்லாந்து மாஸ்டர்ஸில் தனது முதல் பட்டத்தை வென்று சாதனை படைத்திருந்தார். இவர் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தாய்லாந்து வீராங்கனையிடம் தோல்வியுற்றார்.
PV Sindhu, Lakshya Sen enter Thailand Open quarters
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.