தாய்லாந்து ஓபன் பாட்மின்டன்: வெள்ளி வென்ற சாத்விக் - சிராக்!
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரில் சாத்விக் - சிராக் இணை வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்...
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரின் இறுதிப்போட்டியில் கடுமையாகப் போராடிய சாத்விக் - சிராக் இணை இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
இந்தோனேஷியாவின் லியோ ரோலி கார்னாண்டோ - டேனியல் மார்ட்டின் இணையுடன் போராடி, இறுதியில் தோல்வி அடைந்ததால், வெள்ளிப் பதக்கத்துடன் நாடு திரும்பவுள்ளனர்.
தாய்லாந்தில் நடைபெற்றுவரும் பாட்மின்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் தாய்லாந்து நாட்டின் கார்னாண்டோ - டேனியல் மார்ட்டின் இணையுடன், இந்தியாவின் நட்சத்திர வீரர்களான சாத்விக் - சிராஜ் இணை மோதியது.
Advertisement
Advertisement
மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த ஆட்டம் 53 நிமிடங்கள் நீடித்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 21 - 12, 25 - 23 புள்ளிக் கணக்கில் இந்திய இணை போராடி தோல்வி அடைந்தது. இதனால் சாத்விக் - சிராக் இணை இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
மகளிர் பிரிவு பாட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பி.வி. சிந்து, லக்ஷயா சென் ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறியதால், தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே பதக்கம், சாத்விக் - சிராக் இணை வென்ற இந்த வெள்ளிப் பதக்கமாகும்.
Thailand Open 2026 Satwik-Chirag suffers defeat in final, settles with silver
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.