ஜப்பான் ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிவி சிந்து!
இந்திய பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து ஜப்பான் ஓபனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறித்து...
இந்திய பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து (31 வயது) ஜப்பான் ஓபனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹரா மோதவிருந்தார். அவர் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியதால், பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிவி சிந்து அரையிறுதியில் உலகின் நம்.4 வீராங்கனை சென் யூஃபி உடன் மோதினார். இதில் பிவி சிந்து 21-19, 15-10 என இரண்டு கேம்களில் முன்னிலை வகித்த நிலையில், சென் யூஃபி காயம் காரணமாக வெளியேறினார்.
Advertisement
Advertisement
கடைசியாக சையது மோடி இன்டர்நேஷன்ல் தொடரில் 2024ல் வென்ற சிந்து மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். மலேசியா ஓபனிலும் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றார்.
ஜப்பான் ஓபன் இறுதிப் போட்டியில் யமகுச்சி உடன் பிவி சிந்து மோதவிருக்கிறார். இருவரில் யமகுச்சி அதிகமாக வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Two-time Olympic medallist PV Sindhu enters Japan Open final
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.