இன்றைய மருத்துவ சிந்தனை மணத்தக்காளிக் கீரை
மணத்தக்காளிக் கீரையுடன் (ஒரு கைப்பிடி), மஞ்சள் (4 சிட்டிகை) சேர்த்துக் கொதிக்கவைத்துச்
மணத்தக்காளிக் கீரையுடன் (ஒரு கைப்பிடி), மஞ்சள் (4 சிட்டிகை) சேர்த்துக் கொதிக்கவைத்துச் சாப்பிட்டுவந்தால் வாய்ப்புண், நாக்குப் புண் போன்றவை தீரும்.
மணத்தக்காளிக் கீரையுடன் (ஒரு கைப்பிடி), பார்லி (ஒரு ஸ்பூன்), மஞ்சள் (4 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்ததுவந்தால் நீர்ச் சுருக்கு, நீர் எரிச்சல், சிறுநீர் பிரியாமை போன்ற குறைபாடுகள் சரியாகும்.
மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து தேனில் கலந்து சர்பத்போல் காய்ச்சி தினமும் குடித்துவந்தால் இளைத்த உடல் பெருக்கும்.
Advertisement
Advertisement
மணத்தக்காளிக் கீரையுடன் (ஒரு கைப்பிடி), மிளகு (10), திப்பிலி (3) மஞ்சள் (4 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும்.
மணத்தக்காளிக் கீரையை (100 கிராம்), கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடம் போட்டு எடுத்து அதில் எலுமிச்சம்பழத்தைப் (பாதி அளவு) பிழிந்து, சின்ன வெங்காயம் (2) அரிந்து போட்டு, எல்லாவற்றையும் அரைத்துச் சாறு எடுத்து, காலை உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்..
மணத்தக்காளிக் கீரையுடன், தேங்காய் (ஒரு துண்டு), பாசிப்பருப்பு (100 கிராம்) இரண்டையும் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால் தொண்டைப் புண், குடல் புண் குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com