முகப்பு
உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: குங்கிலியம்

வீட்டில் உள்ள நச்சுக்காற்று வெளியேற

Updated On : 2 டிசம்பர் 2017, 12:00 am IST
பகிர்:

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


குங்கிலியம்:

  • வீட்டில் உள்ள நச்சுக்காற்று வெளியேற குங்கிலியத் தூளையும் சிறுது சந்தனக் கட்டைத் தூளையும் சேர்த்து நெருப்பில் போட்டு புகைத்து வந்தால் வீட்டிலுள்ள விஷ காற்று சுத்தப்படும். நோயாளிகளுக்கு இதன் புகை உற்சாகத்தை ஏற்படுத்தும்.
  • மூட்டு வலி நீங்க குங்கிலியம் தூள் (100 கிராம்) எடுத்து அரை லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு மூட்டு வலிக்கு பூசி வந்தால் விரைவில் குணமடையும்.
  • மார்புச்சளி , இருமல் , இரத்தமூலம் குணமாக குங்கிலியம் பவுடர் ஒரு கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் மார்புச்சளி , இருமல் , ரத்த மூலம் குணமாகும்.
  • வெள்ளைப்படுதல் குணமாக குங்கிலியத்தை நெய்விட்டுப் நன்றாகப் பொரித்து, தண்ணீர் விட்டு நன்றாகக் குழைத்து,  அரை தேக்கரண்டி அளவுக்கு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
  • புண்கள் ஆற குங்கிலியக் களிம்பு குங்கிலியம், மெழுகு, தலா 100 கிராம் எடுத்து  சிறு தீயில் உருக்கி, அதனுடன் அரை லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்து, சூடாக இருக்கும்போதே வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனைத் துணியில் தடவி, புண்கள் மீது பற்றாகப் போட்டு வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.
  • உள் மூலம் , சிறுநீர் பாதையில் உண்டாகும் புண் ஆற. குங்கிலியத்தை பொடி செய்து வைத்துக் கொண்டு 2 கிராம் அளவுக்கு பாலில் கலந்து காலை வேளை மட்டும் தினசரி சாப்பிட்டு வந்தால் உடல் பலம் உண்டாகும். உள் மூலம் , சிறுநீர் நாளத்தில் ஏற்படும் புண்கள் போன்றவை  குணமாகும்.

குறிப்பு: வெள்ளைக் குங்கிலியம், சிவப்புக் குங்கிலியம் மற்றும் பூனைக்கண் குங்கிலியம் என்கிற மூன்று வகைகள் உண்டு. மருத்துவப் பயன் அனைத்திற்கும் பொதுவானதே. இருப்பினும் அவற்றிற்கென்று தனித்தனியான, சிறப்பு வாய்ந்த மருத்துவப் பயன்களும் உள்ளன.
 

Advertisement

Advertisement

KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.