முகப்பு
உணவே மருந்து

அதிகப்படியான தாகம் உணர்வைப் போக்க உதவும் அருமருந்து

ஒரு சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது, தொடர்ந்து தண்ணீர் குடிக்கத் தோன்றும். இவர்கள் இந்த சூரணத்தைப் பயன்படுத்திப் பயன்பெறுங்கள். 

Updated On : 11 பிப்ரவரி 2021, 2:30 pm IST
பகிர்:

ஒரு சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது, தொடர்ந்து தண்ணீர் குடிக்கத் தோன்றும். இவர்கள் இந்த சூரணத்தைப் பயன்படுத்திப் பயன்பெறுங்கள். 

தேவையான பொருள்கள்

மருதம்பட்டை      -   100 கிராம்

Advertisement

Advertisement

சீரகம்                    -   50 கிராம்

செய்முறை

முதலில் மருதம் பட்டையை எடுத்துச் சுத்தப்படுத்தி அரைத்துக் கொள்ளவும். சீரகத்தைச் சுத்தப்படுத்தி அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும். பின்பு மருதம் பட்டை பொடியையும் சீரகப் பொடியையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். மருதம் பட்டையை அரைக்க முடியாதவர்கள் நாட்டு மருந்துக் கிடைக்கும் பொடியை 50 கிராம் வாங்கி சீரகத்துடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த  சூரணம் அதிகப்படியான தாக உணர்வைப் போக்க உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் இந்தச் சூரணத்தை தலா மூன்று கிராம் எடுத்து காலை மற்றும் மாலை என இருவேளையும் சாப்பாட்டிற்குப் பின்பு சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.

நீங்கள் எடுத்துக்கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

Telegram குழுவில் இணைய
https://t.me/kovaibalavegetableclinic

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.