ஹெலிகாப்டர் பேர ஊழல்: சிபிஐ வசம் புதிய ஆவணங்கள் ஒப்படைப்பு
இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழலை விசாரித்து வரும் சிபிஐயிடம், மத்திய
இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழலை விசாரித்து வரும் சிபிஐயிடம், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் புதிய ஆவணங்களை வெள்ளிக்கிழமை அளித்தது.
ஆனால், எத்தகைய தகவல்கள் அளிக்கப்பட்டன என்பதைத் தெரிவிக்க சிபிஐ மறுத்து விட்டது. ஹெலிகாப்டர் ஊழலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் விமானப் படை தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட 11 நபர்கள் மீது முதற்கட்ட விசாரணை அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. இவர்களிடத்தில் அடுத்த வாரம் முதல் விசாரணையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்தது.
இந்த ஊழல் தொடர்பான விசாரணைக்கு, வருமான வரித்துறை மற்றும் கணக்குத் துறை அதிகாரிகளின் உதவியை நாட சிபிஐ திட்டமிட்டுள்ளது.
Advertisement
Advertisement