முகப்பு
இந்தியா

ஒடிசா, நாகாலாந்து ஆளுநர்கள் பதவியேற்பு

ஒடிசா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் வியாழக்கிழமை

Updated On : 22 மார்ச் 2013, 2:26 am IST
பகிர்:

ஒடிசா மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.

 காங்கிரஸ் தலைவரான எஸ்.சி. ஜமீர் ஒடிசா மாநில  ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சொக்கலிங்கம் நாகப்பன் பதவிப் பிரமாணம் செய்து

வைத்தார்.

Advertisement

Advertisement

 ஆளுநராக பதவி வகித்த முரளிதர் சந்திரகாந்த் பண்டாரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, ஜமீர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

 பதவியேற்பு விழாவில் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டார்.

நாகாலாந்து: நாகாலாந்து ஆளுநராக சி.பி.ஐ. முன்னாள் இயக்குநரான அஸ்வினி குமார் பதவியேற்றுக்கொண்டார்.

ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் நடந்த நிகழ்ச்சியில், அஸ்வினி குமாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.