முகப்பு
இந்தியா

நடுவானில் மோதல் தவிர்ப்பு: 179 பயணிகள் உயிர் தப்பினர்

நடுவானில் இண்டிகோ நிறுவன விமானம் மற்றொரு விமானத்துடன் மோதவிருந்தது உரிய நேரத்தில்

Updated On : 2 ஏப்ரல் 2013, 2:49 am IST
பகிர்:

நடுவானில் இண்டிகோ நிறுவன விமானம் மற்றொரு விமானத்துடன் மோதவிருந்தது உரிய நேரத்தில் தவிர்க்கப்பட்டதால், 179 பயணிகள் உயிர்தப்பினர்.

அசாம் மாநிலம் திப்ரூகர் நகரில் இருந்து இண்டிகோ நிறுவனத்தின் விமானம் 179 பயணிகளுடன் திங்கள்கிழமை கொல்கத்தா வழியாக குவாஹாட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, பைலட்டுகளுக்கு ஓர் எச்சரிக்கை சமிக்ஞை கிடைத்தது.

விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த சாதனத்தில் இருந்து வந்த எச்சரிக்கை அதுவாகும். அதாவது, நடுவானில் எதிர்திசையிலோ அல்லது அருகிலோ விமானம் வருகிறதா என்பது குறித்து உஷார்படுத்தும் அந்தச் சாதனத்தில் இருந்து பகல் 3.07 மணிக்கு இந்த சமிக்ஞை கிடைத்தது. இதைத் தொடர்ந்து, பைலட்டுகள் விமானத்தை லாவகமாகச் செலுத்தினர். இதன் மூலம் வேறொரு விமானத்துடன் நிகழவிருந்த மோதல் தவிர்க்கப்பட்டு, 179 பயணிகளும் உயிர் தப்பியதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

எனினும், மும்பையில் விமானப் போக்குவரத்து ஆணையகம் (ஏடிசி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அப்பகுதியில் போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. இது தொடர்பாகவே இண்டிகோ நிறுவன விமான பைலட்டுக்கு எச்சரிக்கை அனுப்பப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.