முகப்பு
இந்தியா

பல்கலைக்கழகம் மீதான தாக்குதல்: விசாரணை நடத்த துணைவேந்தர் கோரிக்கை

கொல்கத்தா பிரசிடென்ஸ் பல்கலைக்கழகத்தை சூறையாடியவர்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அதன் துணை வேந்தர் மாளவிகா சர்க்கார் கோரியுள்ளார்.

Updated On : 11 ஏப்ரல் 2013, 10:44 pm IST
பகிர்:

கொல்கத்தா பிரசிடென்ஸ் பல்கலைக்கழகத்தை சூறையாடியவர்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அதன் துணை வேந்தர் மாளவிகா சர்க்கார் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஆளுநர் எம்.கே. நாராயணன், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரசிடென்ஸி பல்கலைக்கழகம் மற்ற கல்வி நிறுவனங்களைப் போல் இல்லை. பல்கலைக்கழக

Advertisement

Advertisement

வளாகம் சூறையாடப்பட்டது அதிர்ச்சியை தருகிறது. சமூக விரோதிகள் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக் கொடிகளை ஏந்தி வந்தது தொடர்பாக ஆளுநருக்கு கடிதம் எழுதுவேன். பல்வேறு துறைகளையும் அவர்கள் சூறையாடி விட்டனர். மாணவ, மாணவியர் தாக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்காமல் போலீஸôர் வேடிக்கை பார்த்தனர். நடவடிக்கை எடுக்குமாறு கூறிய போது, எங்களுக்கு உத்தரவு இல்லை எனக்கூறி விட்டனர் என்றார் சர்க்கார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.