முகப்பு
இந்தியா

கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்: ஆஸ்கர் பெர்னாண்டஸ்

கர்நாடகத்தில் உள்ளாட்சித் தேர்தலைப்போல சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியின் தேசிய பொதுச்செயலர்

Updated On : 22 ஏப்ரல் 2013, 5:18 am IST
பகிர்:

கர்நாடகத்தில் உள்ளாட்சித் தேர்தலைப்போல சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியின் தேசிய பொதுச்செயலர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

தென்கன்னட மாவட்டம், மங்களூரில் பன்ட்வால்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தபோது அவர் பேசியது:

5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வளர்ச்சிப் பணிகள் முழுமையாக முடங்கின. வளர்ச்சி இல்லாவிட்டாலும் ஊழல் ஆட்சியைத் தந்துள்ளதன் மூலம் மக்களை மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளனர். இதனால் மக்கள், பாஜகவுக்கு தக்கபாடம் புகட்டுவர்.

Advertisement

Advertisement

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்திக்கும். அதிக இடங்களை கைப்பற்றி, காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக, மஜதவை பின்னுக்குத் தள்ளிவிட்டு காங்கிரஸ் பெற்றிருந்த வெற்றி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.