முகப்பு
இந்தியா

சர்ச்சைக்குரிய திருமண சட்டங்கள் திருத்த மசோதா அமைச்சர்கள் குழு பரிசீலனைக்கு அனுப்பிவைப்பு

சர்ச்சைக்குரிய திருமணச் சட்டங்கள் திருத்த மசோதா அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Updated On : 2 மே 2013, 1:58 am IST
பகிர்:

சர்ச்சைக்குரிய திருமணச் சட்டங்கள் திருத்த மசோதா அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதன்கிழமை கூறியதாவது: விவாகரத்தான பெண்ணுக்கு கணவரின் பரம்பரை சொத்திலும் பங்கு தர வேண்டும் உள்ளிட்ட திருத்தங்களை திருமண சட்டத்தில் மேற்கொள்வது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், அமைச்சர்கள் குழுவின் பரிசீலனைக்கு இம்

மசோதாவை அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

விவாகரத்தின் போது ஒரு பெண்ணுக்கு கணவனின் சொந்த குடியிருப்பு அல்லது பரம்பரரை சொத்தில் மனைவிக்கு பங்கு தர வேண்டும் என சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்தது.

அதே போல் திருமணத்துக்கு முன்பு கணவன் வாங்கிய சொத்து, பரம்பரை சொத்தில் மனைவிக்கு உரிய பங்கு தொடர்பான அம்சத்தை சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஆலோசனை தெரிவித்தது.

இவ்விரண்டு அம்சங்கள் குறித்து 2 மணி நேரம் மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. இதில் கருத்தொற்றுமை ஏற்படாததால், அமைச்சர்கள் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்து அக்குழு இறுதி செய்து அமைச்சரவைக்கு அனுப்பும் என்றார் சிதம்பரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.