சீட்டு நிதி நிறுவனங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம்
சீட்டு நிதி நிறுவனங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்துள்ளார்.
சீட்டு நிதி நிறுவனங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை கூறியதாவது: சாரதா நிதி நிறுவன மோசடி உள்பட பல்வேறு மோசடிகளால் முதலீட்டாளர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து துறைரீதியாக ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டேன். எனினும் எமது இலாகா ரீதியில் பெரிய அளவில் ஒன்றும் சாதித்து விட முடியாது.
Advertisement
நிதி நிறுவன மோசடிகள் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் தான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.
எனினும் சீட்டு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதில் உள்ள பிரச்னைகள் பற்றி பொதுமக்களிடம் பிரசாரம் செய்யப்படும். கிரெடிட் கார்டு பயன்பாடு, காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்தல், பங்கு வர்த்தகம் தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் என்றார் தாமஸ்.