முகப்பு
இந்தியா

எல்லையில் உள்கட்டமைப்பு:இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு

எல்லைப்பகுதியில் இந்தியா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதை இந்தியா நிராகரிக்கும் என்று தெரிகிறது.

Updated On : 12 ஜூலை, 2013 at 1:32 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:15 PM

எல்லைப்பகுதியில் இந்தியா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதை இந்தியா நிராகரிக்கும் என்று தெரிகிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தரத்தை ஏற்படுத்திக் கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இரு நாடுகள் இடையில் இந்த ஆண்டு பாதுகாப்புச் செயலாளர் நிலையிலான பேச்சுவார்த்தை நடந்தபோது சீனா அளித்த ஆலோசனையின் பேரில் இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

Advertisement

ஏனெனில், எல்லையையொட்டிய பகுதிகளில் சாலைகள் உள்பட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் மிகப்பெரிய திட்டத்தை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தை முடக்க வேண்டும் என்று சீனா உத்தேசித்துள்ளது.

எனவே, மேற்கண்ட ஒப்பந்தத்தில் உள்கட்டமைப்புத் திட்டத்தைக் கைவிடும் அம்சத்தைச் சேர்க்க வேண்டும் என்று சீனா திட்டமிட்டுள்ளது. எனினும் இதை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கும் என்றும் இம்மாத இறுதிக்குள் அத்தகவல் சீனாவுக்கு தெரிவிக்கப்படும் என்றும் தில்லியில் அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.