முகப்பு
இந்தியா

மத்திய அரசிடம்தான் பேச்சு: கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா

கோர்காலாந்து தனி மாநில விவகாரம் பற்றி மேற்கு வங்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.மத்திய அரசுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கோர்கா ஜன முக்திமோர்ச்சா அமைப்பு தலைவர் பிமல் கரங் டார்ஜிலிங்கில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

Updated On : 12 ஆகஸ்ட் 2013, 1:42 am IST
பகிர்:

கோர்காலாந்து தனி மாநில விவகாரம் பற்றி மேற்கு வங்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.மத்திய அரசுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கோர்கா ஜன முக்திமோர்ச்சா அமைப்பு தலைவர் பிமல் கரங் டார்ஜிலிங்கில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கோர்காலாந்து தனி மாநிலம் கோரி கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பு சார்பில் டார்ஜிலிங் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 9-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது. கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பின் மத்திய கமிட்டி உறுப்பினர் சேகர் சர்மா வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பிமல் கரங் செய்தியாளர்களிடம் கூறியது:

Advertisement

Advertisement

கோர்காலாந்து தனிமாநில விவகாரத்துக்கும் மேற்கு வங்க அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. நாங்கள் கோர்காலாந்து பற்றி மத்திய அரசுடன் மட்டுமே பேசுவோம்.

சிலர் நாங்கள் கோர்காலாந்தை யூனியன் பிரதேசமாக மாற்றும்படி கோரிக்கை விடுத்து வருவதாக வீண் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.நாங்கள் பல ஆண்டுகளாக தனி மாநிலம் கேட்டுத்தான் போராடி வருகிறோம்.

ஏற்கனவே எங்களது குழுவினர் மத்திய அரசுடன் இது தொடர்பாக பேசியுள்ளனர்.

15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மட்டும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறாது.

முதல்வர் மம்தா பானர்ஜி எங்களது போராட்டத்தை நிறுத்த 72 மணி நேர கெடு விதித்துள்ளார்.

அவர் விதித்த கெடு முடிந்ததும் டார்ஜிலிங் மக்கள் வீட்டில் இருந்தபடியே காலவரையற்ற போராட்டத்தை தொடர்வார்கள் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.