முகப்பு
இந்தியா

சௌதாலா ஜாமீன் நீட்டிப்பு மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா ஜாமீன் நீட்டிப்பு கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On : 12 செப்டம்பர் 2013, 12:59 am IST
பகிர்:

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா ஜாமீன் நீட்டிப்பு கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திஹார் சிறை அதிகாரிகள் முன்னிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி அவர் கண்டிப்பாக சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆசிரியர் நியமன முறைகேட்டில் சிறையில் அடைக்கப்பட்ட சௌதாலாவுக்கு இதயநோய் பிரச்னை காரணமாக ஃபேஸ்மேக்கர் கருவி பொருத்த தில்லி உயர் நீதிமன்றம் 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. பிறகு ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அவரது இடைக்கால ஜாமீனை நீட்டித்த நீதிமன்றம், அவரது உடல்நிலை குறித்து அறிக்கை அளிக்க ஒரு மருத்துவக் குழுவை நியமிக்குமாறு எய்ம்ஸ் இயக்குநருக்கு உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

அதன்படி இக்குழு அறிக்கையை தாக்கல் செய்தது. அதையடுத்து, சௌதாலாவுக்கு ஜாமீனை நீட்டிக்க மறுத்ததுடன் செப்டம்பர் 17-ல் திஹார் சிறை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைய கெடு விதித்திருந்தது. இதற்கிடையே, மேலும் ஜாமீன் நீட்டிப்பு கோரி சௌதாலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதின்றம், தேவைப்பட்டால் அவருக்கு சிறந்த மருத்துவ நிபுணர்களின் சிகிச்சை அளிக்குமாறு சிறைத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.