முகப்பு
இந்தியா

தலைமைக்கான வாக்கெடுப்பாக மக்களவைத் தேர்தல் இருக்கும்

வரவிருக்கும் மக்களவைத் தேர்தல், "தலைமைக்கான வாக்கெடுப்பாக' இருக்கும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தலைமை பிரச்னையால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறினார்.

Updated On : 12 செப்டம்பர் 2013, 2:41 am IST
பகிர்:

வரவிருக்கும் மக்களவைத் தேர்தல், "தலைமைக்கான வாக்கெடுப்பாக' இருக்கும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தலைமை பிரச்னையால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறினார்.

திருவனந்தபுரத்தில் அரவிந்தர் கலாசார கழகம் புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், "நாட்டில் நடப்பு அரசியல் சூழல்' என்ற தலைப்பில் பேசிய அவர், பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், "முதன்மை எதிர்க்கட்சி பாஜக தனது நிரூபிக்கப்பட்ட தலைமையை, ஆளுமையை முன்நிறுத்தும்போது அத் தேர்தல் ஏறக்குறைய பிரதமரை நேரடியாக தேர்வு செய்வதாகவே அமைந்துவிடும்' என்று கூறினார்.

"ஐக்கிய முற்போக்கு கூட்டணியால் எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. பாஜக ஆளுமைகொண்ட தலைமையை நம்பியிருக்கும்போது, காங்கிரஸ் கட்சி வாரிசு தலைமையை நம்பி நிற்கிறது. பிரதமர் என்பவர் முடிவுகள் எடுப்பவராக இருக்க வேண்டும். அது சரியாகவோ தவறாகவோ இருக்கலாம். ஆனால் தற்போது பிரதமர் மன்மோகன் சிங் கார்ப்பரேட் நிறுவன முறையில் ஆட்சி நடத்துகிறார். முடிவுகள் அரசுக்கு வெளியே எடுக்கப்படுகின்றன. அவற்றை செயல்படுத்தும் அதிகாரியாக பிரதமர் இருக்கிறார். இத்தகைய "கார்ப்பரேட் மாடல்' மூலம் மக்களாட்சியை நடத்த முடியாது என்றார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.