முகப்பு
இந்தியா

மது கோடா சகாக்களின் ரூ. 144 கோடி சொத்துகள் முடக்கம்

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவின் நெருங்கிய தொழிலதிபர்கள் மனோஜ் புனாமியா, அனில் ஆதிநாத் பஸ்தாவதே ஆகியோருக்கு சொந்தமான ரூ. 144 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 12 செப்டம்பர், 2013 at 2:38 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:20 PM

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவின் நெருங்கிய தொழிலதிபர்கள் மனோஜ் புனாமியா, அனில் ஆதிநாத் பஸ்தாவதே ஆகியோருக்கு சொந்தமான ரூ. 144 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி வைக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில், 25 குடியிருப்புகளும், ஒரு வணிக வளாகமும் அடங்கும்.

ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மது கோடா மீது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து குவித்ததாக மத்திய அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

இந்த வழக்கில் மது கோடாவுக்கு நெருங்கிய தொழிலதிபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துகள் குறித்தும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் பண மோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி கே. ராமமூர்த்தி அளித்துள்ள உத்தரவில், "இந்த வழக்கில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள சொத்துகளில் பண மோசடி செய்ததற்கான முகாந்திரம் உள்ளது.

ஆகையால், அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள அனைத்து சொத்துகளும் முடக்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை புறநகர் பகுதியான மாதுங்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பத்து வீடுகளும், நரிமன் பாயின்ட், கோரேகான், மலாட் ஆகிய பகுதியில் உள்ள விலை உயர்ந்த வீடுகளும், ஜாம்ஷத்பூரில் உள்ள ஒரு வணிக வளாகமும் மனோஜ் புனாமியாவுக்கு சொந்தமான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

இதைப்போல், தொழிலதிபர் அனில் ஆதிநாத் பஸ்தாவதேவுக்கு சொந்தமான வீடுகளையும் முடக்கப்பட்டுள்ளன. அனில் ஆதிநாத் அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.