முகப்பு
இந்தியா

5 மாநில தேர்தல்: பாதுகாப்பு குறித்து ஆலோசனை

தில்லி உள்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தல் பாதுகாப்புக்குத் தேவையான படைவீரர்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் புதன்கிழமை விவாதித்தது.

Updated On : 12 செப்டம்பர் 2013, 2:48 am IST
பகிர்:

தில்லி உள்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தல் பாதுகாப்புக்குத் தேவையான படைவீரர்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் புதன்கிழமை விவாதித்தது.

தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத், தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ்.பிரம்மா, நசீம் ஜைதி, மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தில்லி, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இவ்வாண்டு இறுதியில் பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.