நடத்தையில் சந்தேகம்: மனைவியின் மூக்கை நறுக்கிய கணவன்!
தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் அவரது மூக்கை நறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் அவரது மூக்கை நறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் நரோதா ஹன்ஸ்ராம் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் ரத்தோர். இவரது மனைவியை கம்லேஷ். திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகி விட்ட இந்த தம்பதிக்கு ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
சமபத்தன்று சஞ்சீவ் வேலை முடிந்து குடித்து விட்டு வீட்டுக்குத் திருமபிய பொழுது, கம்லேஷ் வேறு யாரோ ஒரு ஆணுடன் அலை பேசியில் பேசிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சீவ் கம்லேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Advertisement
Advertisement
முடிவில் காமலேஷின் அழகை குலைக்கும் பொருட்டு, தன்னுடைய மனைவியின் மூக்கு நுனியை கத்தியால் நறுக்கி விட்டு அவர் தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து கம்லேஷின் பெற்றோர் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். சஞ்சீவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.