முகப்பு
செய்திகள்

கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள்: மீண்டும் முதலிடம் பிடித்த பிரேசில்!

உலகக் கோப்பையில் பிரேசில் கால்பந்து அணியின் உலக சாதனை குறித்து...

Updated On : 20 ஜூன் 2026, 4:29 pm IST
பிரேசில் கால்பந்து அணியினர். - படம்: ஏபி
பகிர்:

பிரேசில் அணி கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்து, மீண்டும் தனது உலக சாதனையை தன்னிடமே தக்கவைத்துகொண்டது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6 மணிக்கு நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் பிரேசில் அணி ஹைதியை 3-0 என வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் பிரேசிலின் மேத்திவ்ஸ் குன்ஹா 23, 36ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். பின்னர், முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்தார்.

Advertisement

Advertisement

இந்த அபார வெற்றியின் மூலமாக பிரேசில் கால்பந்து உலகக் கோப்பையில் மட்டும் 241 கோல்கள் அடித்துள்ளது. இந்த உலகக் கோப்பைக்கு முன்னதாக முதலிடம் பிடித்திருந்த பிரேசில் அணியை ஜெர்மனி தனது முதல் போட்டியில் 7 கோல்கள் அடித்ததால் முந்தியது.

தற்போது, பிரேசில் அணி மீண்டும் தனது முதலிடத்தைப் பிடித்துள்ளது. கோல்கள் விவரங்கள்:

1. பிரேசில் - 241 கோல்கள்

2. ஜெர்மனி - 239 கோல்கள்

3. ஆர்ஜென்டீனா - 155 கோல்கள்

4. பிரான்ஸ் - 139 கோல்கள்

5. இத்தாலி - 128 கோல்கள்

6. இங்கிலாந்து - 108 கோல்கள்

7. ஸ்பெயின் - 108 கோல்கள்

8. நெதர்லாந்து - 98 கோல்கள்

9. உருகுவே - 90 கோல்கள்

10. ஹங்கேரி - 87 கோல்கள்

summary

Most goals in the Football World Cup: Brazil takes the top spot again!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments