கன்கசன் மாற்றுவீரர்: கிரீனுக்குப் பதிலாக யு19 உலகக் கோப்பையில் அசத்திய ஆலிவர் பீக்!
காயம் காரணமாக வெளியேற்றப்பட்ட கேமரூன் கிரீனுக்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட ஆலிவர் பீக் குறித்து...
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் கேமரூன் கிரீனுக்கு மாற்றாக யு19 உலகக் கோப்பையில் அசத்திய ஆலிவர் பீக் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹொபர்ட்டில் இன்று காலை இந்திய நேரப்படி 9 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து, 48.3 ஓவர்களில் 328 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Advertisement
Advertisement
தற்போது ஆஸி. பேட்டிங் செய்து வருகிறது. 34 ஓவர்களில் 162 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதில் அதிகபட்சமாக மாட் ரென்ஷா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் கேமரூன் கிரீன் ஹெல்மட்டில் பந்து பட்டு ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவருக்குப் பதிலாக யு19 உலகக் கோப்பையில் அசத்திய ஆலிவர் பீக் கன்கசன் சப்ஸ்ட்யூட்டாக சேர்க்கப்பட்டுள்ளார்.
20 வயதான ஆலிவர் பீக் 8 ஒருநாள் போட்டிகளில் 210 ரன்கள் எடுத்துள்ளார். 16 முதல்தர போட்டிகளில் 640 ரன்கள் குவித்துள்ளார்.
வருங்கால ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படும் அவர் இந்தப் போட்டியில் வெற்றியைப் பெற்றுத் தருவாரா என அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.