FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வீரேந்திர சேவாக் பாராட்டு!

ஆசிய கோப்பையில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.

- படம் | வீரேந்திர சேவாக் (எக்ஸ்)
பகிர்:

ஆசிய கோப்பையில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இறுதிப்போட்டி இன்று (நவம்பர் 14) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: என்ன ஒரு போட்டி! என்ன மாதிரியான முடிவு! ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 338 ரன்கள் இலக்கை துரத்திப் பிடித்தது மிகவும் சிறப்பான விஷயம். லக்‌ஷயாவின் 80, ஆர்யவீரின் 58 மற்றும் மோஹித் உல்வாவின் மாயாஜால ஆட்டம் சிறப்பாக இருந்தது. என்ன ஒரு நம்பமுடியாத வெற்றி. இந்த இளம் சாம்பியன்களை நினைத்து பெருமைப்படுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Virender Sehwag has congratulated the Indian team for winning the championship title after defeating Pakistan in a thrilling Asia Cup final.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.