இந்தியா

மனைவியின் மன ரீதியான துன்புறுத்தல்: கணவன் தூக்கிட்டு தற்கொலை!

மனைவியின் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

PTI

நாசிக்: மனைவியின் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் காரணமாக கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ளது ஓஜார் பகுதி. இங்கு வசித்து வருபவர் சந்தோஷ் பவார்.(32). தனியார் நிறுவன ஊழியர். நேற்று தனது வீட்டில் உத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட  நிலையில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் உடலில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதம் ஒன்றில் தனது மனைவி மற்றும் அவரது சகோதரர்களின் மனம் மற்றும் உடல்  ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சந்தோஷின் சகோதரர் சச்சின் கொடுத்த புகாரின் அடிப்படையில் சந்தோஷின் மனைவி ப்ரியா, அவரது சகோதரர்கள் கிருஷ்ணா ஷிண்டே, விஷ்ணு ஷிண்டே மற்றும் அப்பா போர்குடேஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யபபடவில்லை.     

பிரேத பரிசோதனைக்கு பிறகு சந்தோஷின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தைகள் 2வது நாளாக சரிவுடன் நிறைவு!

அவர்கள் செய்வது ரௌடித்தனம்... யாரைச் சொல்கிறார் சுதா கொங்கரா?

“பொழுதுபோக்கிற்குள் அரசியல் வேண்டாம்!” நடிகர் ரவி மோகன்

அல்லு அர்ஜுனுடன் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ்! அறிவிப்பு விடியோ!

தலைகீழாகக் கவிழ்ந்த தனியார் பேருந்து! பயணிகள் காயம்!

SCROLL FOR NEXT