அம்பேத்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு
கடல்சார் துறையில் அம்பேத்கரின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
கடல்சார் துறையில் அம்பேத்கரின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
தேசிய கடல்சார் தினமான ஏப்ரல் 5-ஆம் தேதி பிரதமர் மோடி தனது சுட்டுரையில் இதுகுறித்து பதிவிட்டுள்ளதாவது:
செழுமையான வரலாறு கொண்ட இந்திய கடல்சார் துறையானது, தேசத்தின் மாற்றம் மற்றும் முன்னேற்றத்துக்கு சாத்தியமான ஆற்றல்களைக் கொண்டுள்ளது. தேசத்தை செழித்தோங்கச் செய்வதற்காக நாட்டின் கடல்சார் துறையை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
கடல்சார் துறையை பலப்படுத்துவதற்கான எங்களது முயற்சிகள், அம்பேத்கரின் பணிகளை முன்னுதாரணமாகக் கொண்டவையாகும். நீர்வழித்தடம், பாசனம், கால்வாய்கள் வலைப்பின்னல், துறைமுகங்கள் ஆகியவற்றுக்கு அம்பேத்கர் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார். கடல்சார் துறையின் மதிப்பை அறிந்திருந்த அம்பேத்கர் அத்துறையில் மேற்கொண்ட பணிகளானது, இந்திய மக்களுக்கு பல்வேறு நலன்களை அளித்துள்ளது என்று பிரதமர் மோடி தனது பதிவில் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.