குடியரசுத் தலைவர், பிரதமர் வெளிநாடு பயணம்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 6 நாள் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு சனிக்கிழமை (ஏப். 7) பயணம் மேற்கொள்கிறார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 6 நாள் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு சனிக்கிழமை (ஏப். 7) பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடி 5 நாள் பயணமாக ஸ்வீடன், பிரிட்டனுக்கு வரும் 16-ஆம் தேதி செல்ல இருக்கிறார்.
தனது ஆப்பிரிக்க பயணத்தில் ஈகுவடேரியல் கினி, ஸ்வாசிலாந்து, ஜாம்பியா ஆகிய நாடுகளுக்கு ராம்நாத் கோவிந்த் செல்கிறார். அந்நாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும் அவர், அங்குள்ள இந்திய வம்சாவளியினரையும் சந்தித்துப் பேச இருக்கிறார். இந்தியாவுக்கு இயற்கை எரிவாயுவை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈகுவடேரியல் கினி முக்கியமானதாகும். அங்கு இந்தியத் தூதரகம் அமைக்கும் முடிவையும் இந்தப் பயணத்தின்போது ராம்நாத் கோவிந்த் அறிவிக்க இருக்கிறார்.
பிரதமரின் பயணம்: வரும் 16-ஆம் தேதி ஸ்வீடன் செல்லும் பிரதமர் மோடி அங்கு இந்தியா- நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார். நார்டிக் என்பது நார்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பாகும். ஸ்வீடன் மன்னர் மற்றும் பிரதமரை மோடி சந்தித்துப் பேச இருக்கிறார். தொடர்ந்து பிரிட்டனுக்கு செல்லும் அவர், 19, 20-ஆம் தேதிகளில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இது தவிர இந்தியா-பிரிட்டன் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் மோடி பேச இருக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.