முகப்பு
இந்தியா

கோவா: பாரிக்கர் இல்லாததால் அரசுப் பணிகள் முடக்கம்

கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கர் இல்லாததால், அரசுப் பணிகள் முடங்கியுள்ளதாக மாநில கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் கோவிந்த் கவாடே கூறியுள்ளார்.

Updated On : 6 ஏப்ரல் 2018, 2:26 am IST
பகிர்:

கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கர் இல்லாததால், அரசுப் பணிகள் முடங்கியுள்ளதாக மாநில கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் கோவிந்த் கவாடே கூறியுள்ளார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அதற்கு முன்பாக, அலுவலகப் பணிகளை மேற்கொள்வதற்காக, மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தார்.
அந்தக் குழுவில், கோவா ஃபார்வடு கட்சியைச் சேர்ந்த விஜய் சர்தேசாய், பாஜகவைச் சேர்ந்த பிரான்சிஸ் டிசெளஸா, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியைச் சேர்ந்த சுதின் தவாலிகர் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு பாரிக்கர் ஆட்சியமைப்பதற்கு ஆதரவு அளித்த சுயேச்சை உறுப்பினரான கோவிந்த் கவாடே, மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து வியாழக்கிழமை கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
முதல்வர் இல்லாமல் அரசு நிர்வாகத்தை கவனிப்பது சிரமமான விஷயம் என்பது அனைவரும் அறிந்த ரகசியமாகும். பாரிக்கர் இல்லாதது வெளிப்படையாகத் தெரிகிறது. முதல்வர் அமைத்துள்ள அமைச்சரவை ஆலோசனைக் குழு, சூழலைக் கையாளும் நிலைமையில் இல்லை. அமெரிக்கா சென்றுள்ள பாரிக்கர் கோவா மாநிலத்துக்குத் திரும்பி, அரசுப் பணிகளைக் கவனிக்கத் தொடங்கினால் மட்டுமே, இந்த மாநிலம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments