நேரடி மானியத் திட்டத்தால் ரூ.83 ஆயிரம் கோடி மிச்சம்: நீதி ஆயோக்
நேரடி மானியத் திட்டத்தால், ரூ.83 ஆயிரம் கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது என்று மத்திய கொள்கைக் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறினார்.தில்லியில் தேசிய செயல்முறை
நேரடி மானியத் திட்டத்தால், ரூ.83 ஆயிரம் கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது என்று மத்திய கொள்கைக் குழுவின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறினார்.தில்லியில் தேசிய செயல்முறை பொருளாதார ஆய்வுக் கவுன்சிலின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமிதாப் காண்ட் மேலும் கூறியதாவது:
நேரடி மானியத் திட்டத்தின் கீழ், 437 சமூக நலத் திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. நேரடி மானியத் திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைத்ததால், அரசுக்கு ரூ.83,000 கோடி வரை மிச்சமாகியுள்ளது. நாடு முழுவதும் 2.7 கோடி போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. அரசின் மின்னணுமயமாக்கல் நடவடிக்கை, இந்தியாவை வலிமையான சமூகமாக மாற்றுவதிலும், நாட்டின் முன்னேற்றத்திலும் பெரும் பங்காற்றி வருகிறது. மின்னணுமயமாக்கலை மத்திய அரசு மேலும் தீவிரமாக பரவலாக்கம் செய்ய வேண்டும். அதே சமயம், தனிநபர் அந்தரங்கமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.