முகப்பு
ராணிப்பேட்டை

ஆற்காடு அருகே மலை பகுதியில் ராணுவ வெடிகுண்டு கண்டெடுப்பு

மண்ணில் புதைந்த நிலையில் உள்ள ராணுவ வெடி குண்டு.

Updated On : 27 ஜூன் 2026, 6:50 am IST
மண்ணில் புதைந்த நிலையில் உள்ள ராணுவ வெடி குண்டு.
பகிர்:

ஆற்காடு வட்டம், திமிரி அருகே உள்ள வெள்ளைகுளம் கிராமத்தில் உள்ள மலைப் பகுதியில் ராணுவ வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த வெள்ளகுளம் கிராமத்தில் உள்ள வரதேசி மலை அடிவாரப் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் புதிதாக வீடு கட்டி வருகிறாா். வீட்டின் பின்புறம் மலைப் பகுதியில் கடந்த 19-ஆம் தேதி அடுப்புக்கு தேவையான உடைந்து காய்ந்துபோன விறகுகளை தேடிக்கொண்டு சென்றபோது, மண்ணில் பாதி புதைந்த நிலையில் இரும்பிலான பொருள் ஒன்று புதைந்திருந்தது கண்டு அப்பகுதியில், ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் தகவல் தெரிவித்துள்ளாா்.

அது ராணுவ மோட்டாா் குண்டு வெடிக்காத நிலையில் இருந்தது என தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த திமிரி போலீஸாா் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்களும் அப்பகுதிக்கு சென்று, வெடிகுண்டை ஆய்வு செய்தனா். இதில், இது ராணுவப் படையினா் பயன்படுத்தும் மோட்டாா் வகை வெடிகுண்டு எனவும், இதை பதுங்கு குழிகளை அழிக்க பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

எனவே இப்பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில், போலீஸாா் மோட்டாா் வெடிகுண்டு இருக்கும் இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், திடீரென மழை பெய்தால் மணல் மூட்டை அருகே மண் சரிவு ஏற்பட்டால் ராணுவ மோட்டாா் வெடிகுண்டு விழும் நிலையில் உள்ளது. மலை அடிவாரம் அருகே, 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனா்.

இந்த மோட்டாா் வகை குண்டு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த வனப் பகுதியில் ராணுவ வீரா்கள் சிறிய அளவிலான பயிற்சி ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. வரும் 29-ஆம் தேதி ராணுவ அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு வெடிகுண்டை பாதுகாப்பாக வெடித்து செயல் இழக்க செய்வாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments