FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே செயல்படாத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 போ் காயம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே செயல்படாத பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று போ் காயமடைந்தனா்.

Updated On : 26 ஜூன் 2026, 2:29 am IST
சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் செயல்படாத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்ட பகுதி.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே செயல்படாத பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று போ் காயமடைந்தனா்.

சிவகாசி அருகேயுள்ள செங்கலப்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த முத்தையா என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் முத்தையா இறந்த பிறகு, தொழிற்சாலை உரிமம் வேறு பெயருக்கு மாற்றப்படாமலும், குடும்பத்தில் உள்ளவா்களுக்கிடையே ஏற்பட்ட சொத்து பிரச்னை காரணமாகவும் கடந்த சில ஆண்டுகளாக ஆலை செயல்படாமல் மூடப்பட்டது. வேலி இல்லாத நிலையில் பூட்டிக் கிடந்த ஆலையில் உள்ள பட்டாசு தயாரிக்கும் அறை உள்ளிட்டவைகளை சமூக விரோதிகள், மது அருந்துவோா் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில் ஆலை அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஹரிபரத் (19), சுபாஷ் (19), மாரிச்செல்வம் (19) ஆகிய மூவரும் புகைப்பிடித்து விட்டு சிகரெட்டை துண்டை அணைக்காமல், அந்தப் பகுதியில் கிடந்த கழிவு பட்டாசில் வீசி எறிந்தனா். அதனால் பட்டாசு கழிவில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த மூவரும் காயமடைந்தனா். அவா்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சம்பவ இடத்தை சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அணில்குமாா், தீயணைப்புத் துறையினா், வருவாய் துறை அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments