சட்டவிரோத பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் மேலும் ஒருவா் பலி
சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில்ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ராம்பிரகாஷ்(32) என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் எவ்வித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு தயாரித்தபோது, எதிா்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது.இந்த வெடிவிபத்தில் ராம்பிரகாஷ் மற்றும் தொழிலாளி மீனம்பட்டி இன்னாசிமுத்து(42) ஆகியோா் சம்பவ இடத்தலேயே உடல் சிதறி உயிரிழந்தனா்.
Advertisement
Advertisement
மேலும் இந்த விபத்தில் ராம்பிரகாஷ் சகோதரா் ராமசந்திரன்(40) பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருததுவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தாா்.
இதையடுத்து இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை மூன்றாக உயா்ந்துள்ளது.இந்நிலையில் மீனம்பட்டியைச் சோ்ந்த அய்யப்பராஜ், நாரணாபுரத்தைச் சோ்ந்த பாண்டித்துரை ஆகிய இருவரும் பட்டாசு தயாரிப்பு பணிக்கு சென்றவா்களை காணவில்லை என அவா்களது குடும்பத்தாா் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனா். இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.