முகப்பு
இந்தியா

மேலும் 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு

சமீபத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

Updated On : 6 ஏப்ரல் 2018, 2:27 am IST
பகிர்:

சமீபத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் வி.பிரபாகர் ரெட்டி, ஆங்கிலத்தில் கடவுளின் பெயரில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸின் சையது நசீர் ஹுசைன், அல்லாவின் பெயரில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். முன்னதாக, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வந்த இருவரையும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வரவேற்றார்.
நாடு முழுவதும் காலியாக இருந்த மாநிலங்களவை இடங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், புதிதாக 58 உறுப்பினர்கள் அந்த அவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களில் 53 பேர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இந்த 2 எம்.பி.க்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 55 பேர் பதவியேற்றுக் கொண்டனர். உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உள்பட 3 உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்றுக் கொள்ளவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments