முகப்பு
இந்தியா

காற்று மாசை கட்டுப்படுத்த தனிநபர் பங்களிப்பு அவசியம்: அரவிந்த் கேஜரிவால்

தில்லியில் காற்று மாசு கடுமையான பிரிவுக்கு சென்றது. எனவே, காற்றின் தரக் குறியீட்டு அளவு 403 ஆக பதிவாகியது. 

Updated On : 25 டிசம்பர் 2018, 3:31 pm IST
பகிர்:

தில்லியில் காற்று மாசு கடுமையான பிரிவுக்கு சென்றது. எனவே, காற்றின் தரக் குறியீட்டு அளவு 403 ஆக பதிவாகியது. இதனால், நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களே சுவாசிப்பதற்கு சிரமப்படுவார்கள் என்றும் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பனியுடன் மாசு கலந்துள்ளதால் அது மேலும் மாசை பலமடையச் செய்துள்ளது. வரும் நாள்களில் குளிர் அதிகரித்தாலோ, அடர்பனி அதிகரித்தாலோ காற்று மாசு மேலும் அதிகரிக்கும். 

ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 0-50 வரை இருந்தால் நல்ல பிரிவிலும், 51- 100 திருப்திகரம், 101 - 200 மிதமானது, 201 - 300 மோசம், 301 - 400 மிகவும் மோசம், 401 - 500 என இருந்தால் காற்று மாசு கடுமையான பிரிவில் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், செய்தியாளர்களிடம் செவ்வாய்கிழமை கூறியதாவது,

காற்று மாசை கட்டுப்படுத்த தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தில்லி முழுவதும் அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதலாக 3 ஆயிரம் பேருந்துகளை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரிய மெட்ரோ ரயில் சேவைக்காக திங்கள்கிழமை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

தேவையென்றால் மீண்டும் ஒற்றை, இரட்டை இலக்க எண்கள் கொண்ட வாகன நடைமுறை அமல்படுத்தப்படும். அரசு மட்டும் அல்லாமல் காற்று மாசை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு தனிநபரின் பங்களிப்பும் அதிகளவில் உள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments