கருணை இன்றி சுட்டுக் கொல்லுங்கள்.. ஒரு முதல்வரின் பேச்சு இது!
ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்த குற்றவாளிகளை, கருணை இன்றி சுட்டுக் கொல்லுங்கள் என்று கர்நாடக முதல்வர் கூறிய விடியோ வைரலாகியுள்ளது.
பெங்களூரு: ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைக் கொலை செய்த குற்றவாளிகளை, கருணை இன்றி சுட்டுக் கொல்லுங்கள் என்று கர்நாடக முதல்வர் கூறிய விடியோ வைரலாகியுள்ளது.
மாண்டியா பகுதி ஐக்கிய ஜனதா தளக் கட்சி நிர்வாகி பிரகாஷ் நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தத் தகவல் விஜயாபுரம் பகுதிக்கு வந்த கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், செல்போனை எடுத்து ஒருவரிடம் பேசிய குமாரசாமி, பிரகாஷ் மிகவும் நல்ல மனிதர், அவரை ஏன் கொன்றார்கள் என்று தெரியவில்லை?, குற்றவாளிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லுங்கள், எந்த பிரச்னையானாலும் பரவாயில்லை என்று கூறினார்.
Advertisement
Advertisement
இதனை அங்கிருந்த பொதுமக்களும், ஊடகங்களும் விடியோவாகப் பதிவு செய்ய, அந்த விடியோதான் இன்று வைரலாகியுள்ளது.
ஒரு முதல்வரே இப்படி உணர்ச்சிவசப்பட்டு குற்றவாளிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்று சொல்லலாமா என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
இது குறித்து செய்தியாளர்கள் குமாரசாமியிடம் கேட்டபோது, அப்போது உணர்ச்சிவசப்பட்டுப் பேசியது அது. அந்த கொலைக்காரர்கள் ஏற்கனவே 2 கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். சிறையில் இருந்து பெயிலில் வந்து எங்கள் கட்சி நிர்வாகியை கொலை செய்துள்ளனர் என்று கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.