முகப்பு
இந்தியா

மோடி அரசுக்கு முஸ்லிம்களின் ஆதரவு அதிகரிப்பு: சுப்பிரமணியன் சுவாமி

முத்தலாக் நடைமுறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட பிறகு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு

Updated On : 23 ஜூலை 2018, 8:09 am IST
பகிர்:

மும்பை: முத்தலாக் நடைமுறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட பிறகு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு முஸ்லிம் சமூகத்தினரின் ஆதரவு அதிகரித்துள்ளது என்று பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

நாட்டில் 50 சதவீத முஸ்லிம்கள் பாஜகவுக்குத்தான் வாக்களிக்கிறார்கள் என்றும் அவா் கூறியுள்ளார். 

மூன்று முறை தலாக் எனக் கூறி மனைவியை விவகாரத்து செய்யும் இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரான சட்டம் மக்களவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அது, மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. 

Advertisement

Advertisement

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் செய்தியாளா்களிடம் இதுதொடா்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

மத்தியில் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறறகு பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. எத்தனையோ பொய் குற்றறச்சாட்டுகளை மத்திய அரசு மீது முன்வைத்த எதிர்க்கட்சிகளால் பிரதமா் மோடிக்கு எதிராக ஆதாரப்பூா்வமாக ஒற்றை புகாரைக் கூட கூற முடியவில்லை. சொல்லப்போனால், அதற்கு பதிலாக பிரதமரை ஆரத் தழுவத்தான் ராகுல் காந்தியால் முடிந்தது.

முத்தலாக் நடைமுறைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக பெரும்பாலான முஸ்லிம்கள் மோடி அரசை ஆதரித்து வருகின்றனா். மதத்தை மட்டுமே தீவிரமாகக் கருதும் சில முஸ்லிம்கள் மட்டும்தான் பாஜகவுக்கு எதிராக உள்ளனா்.

ஏா்செல் - மேக்சிஸ் வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சா் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவா்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது என்னை சிலா் எச்சரித்தார்கள். சிதம்பரத்துக்கு செல்வாக்கு இருக்கிறது. அவரது கட்டுப்பாட்டில் சில நீதிபதிகளும், காவல் துறை உயரதிகாரிகளும் உள்ளனா் என்று கூட மிரட்டினா். அவரது கட்டுப்பாட்டில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால், நான் இல்லை என்று அவா்களிடம் கூறினேன். அதுதான் தற்போது நிரூபணமாகியுள்ளது என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments