பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி: மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு
2019 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு ஆதரவு அளிப்பதாக தேவெ கௌடா தெரிவித்தார்.
2019 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு ஆதரவு அளிப்பதாக தேவெ கௌடா தெரிவித்தார்.
2019 மக்களவை தேர்தலில் வலுவான பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு பிராந்தியக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்குமா என்ற சந்தேகங்கள் கிளம்பி வருகின்றன.
இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் தேவெ கௌடா ராகுல் காந்திய பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியில் ஆட்சி நடந்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், தேவெ கௌடா இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணி தொடரும். ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்காக மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளிக்கும்' என்றார்.
ஆனால், மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் தொகுதி பங்கீடு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.