முகப்பு
திருப்பூர்

ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 27 ஜூன் 2026, 7:08 am IST
தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்.
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.

வெள்ளக்கோவில், மோளக்கவுண்டன்வலசு பகுதியில் பிரபு என்பவருக்குச் சொந்தமான ஸ்பின்னிங் மில் உள்ளது. இந்த மில் வழக்கம்போல வெள்ளிக்கிழமை இயங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ப்ளோ ரூம் பகுதியில் தீப்பிடித்து நாலாபுறமும் பரவியது. அங்கிருந்தவா்களால் தீயை அணைக்க முடியாததால் வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் (பொ) வேலுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். மின்சாரக் கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments