ஆந்திர மாநிலத்துக்கு அடுத்த ஆண்டு முதல் தனி உயர் நீதிமன்றம்: உச்ச நீதிமன்றம்
ஆந்திர மாநிலத்துக்கான தனி உயர் நீதிமன்றம் அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்துக்கான தனி உயர் நீதிமன்றம் அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் இரண்டாக பிரியும் வரை உயர் நீதிமன்றம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வந்தது. 2014-ஆம் ஆண்டில் இரு மாநிலங்களும் பிரியும் போது ஹைதராபாத் தெலங்கானா மாநிலத்துடன் இணைந்தது. இதையடுத்து, ஆந்திர மாநிலத்துக்கு தனி உயர் நீதிமன்றத்தை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
தனி உயர் நீதிமன்றத்தின் கட்டட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அது செயல்பாட்டுக்கு வரும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ கே சிக்ரி மற்றும் அஷோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்தது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது, "இதற்கான அறிவிப்பு ஜனவரி 1, 2019 வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதன்மூலம், இரண்டு உயர் நீதிமன்றங்களும் தனித்தனியாக செயல்படலாம். ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம் புதிய கட்டடத்தில் விரைவில் செயல்படலாம்" என்று தெரிவித்தனர்.
ஆந்திராவில் கட்டமைக்கப்பட்டு அதன் தலைநகரமான அமராவதியில் இந்த நீதிமன்றம் அமையவுள்ளது. இதன்மூலம், நாட்டின் 25-ஆவது உயர் நீதிமன்றம் என்ற பெருமை ஆந்திர உயர் நீதிமன்றத்துக்கு கிடைக்கவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.