தில்லி சர்வதேச விமான நிலையத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்எல்ஏ கைது
தில்லி சர்வதேச விமான நிலையத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிகார் எம்எல்ஏ சந்திரசேகரை போலீஸார் கைது
புதுதில்லி: தில்லி சர்வதேச விமான நிலையத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பிகார் எம்எல்ஏ சந்திரசேகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிகார் மாநிலம் மாதேபுரா சதார் தொகுதி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ சந்திரசேகர். இவர் கடந்த புதன்கிழமை (பிப்.20) தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது தனது உடைமைகளுடன் 10 துப்பாக்கி குண்டுகளை எடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.