மிஸோரம்: அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் தலைமையகத்தை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவு
மிஸோரம் மாநிலத் தலைநகர் ஐசாலில் இயங்கி வரும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவின் தலைமையகத்தை வரும் மே 15-ஆம் தேதிக்குள் வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மிஸோரம் மாநிலத் தலைநகர் ஐசாலில் இயங்கி வரும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவின் தலைமையகத்தை வரும் மே 15-ஆம் தேதிக்குள் வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர், திங்கள்கிழமை கூறியதாவது: மிஸோரமில் கடந்த 1988-ஆம் ஆண்டில் முதல்வர் லால்தங்கா தலைமையில் மிஸோ தேசிய முன்னணியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது முதல், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினரின் தலைமையகம், தலைநகர் ஐசாலில் உள்ள ஜோடின் சதுக்கத்தில் இயங்கி வருகிறது. இதனிடையே, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் தாக்குதல் நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவின் தலைமையகத்தை, வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மிஸோரம் அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, தலைநகர் ஐசாலில் இருந்து 15 தொலைவில் உள்ள ஜோகாவ்சங் என்ற இடத்தருகே அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினருக்குப் புதிய தலைமையகம் கட்டப்பட்டு வந்தது.
கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், தலைமையகத்தை ஐசால் நகரில் இருந்து, வரும் மே மாதம் 15-ஆம் தேதிக்குள் மாற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தலைமையகம் இடம் மாற்றப்பட்டது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் நிர்வாகத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.