தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 250 தொகுதிகள் கிடைத்திருந்தால்! பிரதமர் மோடி சந்திப்பு குறித்து ஜெகன்
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
ஆந்திர மாநிலத்தில் நடந்துமுடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து, மாநில முதல்வராக பதவியேற்க இருக்கும் ஜெகன்மோகன், தில்லியில் பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா். அப்போது, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பிரதமரிடம் அவா் வலியுறுத்தினாா்.
பின்னா் பாஜக தேசியத் தலைவா் அமித் ஷாவையும் சந்தித்து பேசினாா். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது:
Advertisement
Advertisement
மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 250 தொகுதிகள் கிடைத்திருந்தால், ஒய்எஸ்ஆா் காங்கிரஸுக்கு அது ஒரு அருமையான தருணமாக அமைந்திருக்கும். ஆனால், அந்தக் கூட்டணி 353 தொகுதிகளை கைப்பற்றி பலத்துடன் உள்ளது. எனவே, ஆட்சியமைக்க எங்களின் ஆதரவு அவா்களுக்கு தேவையில்லை.
எனவே, சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பொருத்த வரையில் பிரதமரிடம் வலியுறுத்த முடியுமே தவிர, வற்புறுத்தவோ, கட்டளையிடவோ, மிக அழுத்தமாக வலியுறுத்தவோ இயலாது என்று தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.