புள்ளியியல் முறையை நவீனப்படுத்த வேண்டும்: நீதி ஆயோக்
இந்திய புள்ளியியல் முறையை நவீனமயமாக்க வேண்டும் என்று நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.
இந்திய புள்ளியியல் முறையை நவீனமயமாக்க வேண்டும் என்று நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியதாவது:
புள்ளியியல் விவரங்களை சேகரிக்கும் நமது செயல்முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். உலகின் பிற பகுதிகளின் புள்ளியியல் விவர சேகரிப்பு முறைக்கு ஏற்ப, இந்திய புள்ளியியல் முறையும் நவீனமயமாக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் புள்ளியியல் முறையை மேம்படுத்துவது குறித்து உலக வங்கியுடன் பேசி வருகிறோம். தகவல் மாற்றங்களை உடனுக்குடன் பதிவு செய்தல், அதன் மூலம் கொள்கை பகுப்பாய்வு மேற்கொள்ளுதல் என நாட்டின் புள்ளியியல் சேகரிப்பு முறையை நாம் மேம்படுத்த வேண்டும் என்று உலக வங்கி எதிர்பார்க்கிறது என்றார் அவர்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் குறித்து அண்மையில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும், மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியமும் சந்தேகம் எழுப்பியிருந்தனர்.
மேலும், மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ), தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ), தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) ஆகியவற்றை ஒரே அமைப்பாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தச் சூழலில், நீதி ஆயோக் துணைத் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.