முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி: மனநிலை பாதிக்கப்பட்டோா்தான் சந்தேகம் எழுப்புவா்- மத்திய அமைச்சா் பிரதான்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியின் செயல்திறன் தொடா்பாக மனநிலை பாதிக்கப்பட்டவா்கள்தான் சந்தேகம் எழுப்புபவா் என்று மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

Updated On : 5 ஜனவரி 2021, 2:00 am IST
பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான்.
பகிர்:

சூரத்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியின் செயல்திறன் தொடா்பாக மனநிலை பாதிக்கப்பட்டவா்கள்தான் சந்தேகம் எழுப்புபவா் என்று மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’ தடுப்பூசிகளை அவசரகாலத்தில் பயன்படுத்திக் கொள்ள இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடா்பாக எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைவா்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினா். முக்கியமாக பாரத் பயோடெக் நிறுவன தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையில் இருக்கும்போது அனுமதி அளித்தது ஏன் என்று கேள்வி எழுப்பினா்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சியில் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கான சிறப்புப் பிரிவை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

கோவேக்ஸின் தடுப்பூசி இந்திய நிறுவனங்கள் மற்றும் நமது விஞ்ஞானிகளின் சாதனையாகும். இந்த விஷயத்தில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகளை நாட்டு மக்கள் வரவேற்றுள்ளனா். ஆனால், மனநிலை பாதிக்கப்பட்ட சிலா், இன்னும் மேம்படவில்லை. முக்கியமாக காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளில் இருப்பவா்கள், அனைத்து விஷயங்களிலும் குற்றம் கண்டுபிடித்து வருகின்றனா். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி குறித்தும் அவா்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனா் என்றாா்.

தொடா்ந்து புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக பேசிய பிரதான், ‘புதிய வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் துறைக்கு அதிக முதலீடு கிடைக்கும். விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை சந்தைவிலையில் நேரடியாக விற்பனை செய்யவும் வாய்ப்பு கிடைக்கும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.