முகப்பு
இந்தியா

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி பேச்சு

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை பேசினார்.

Updated On : 5 ஜனவரி 2021, 9:37 pm IST
கோப்புப்படம்
பகிர்:


பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை பேசினார்.

இதுபற்றி பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாவது:

"பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு பிரிட்டன் பிரதமர் ஜான்சன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். அதேசமயம் பிரிட்டனில் நிலவும் கரோனா சூழல் காரணமாக குடியரசு தின விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தமும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

எதிர்காலத்தில் இந்தியா வருவதற்கான ஆர்வத்தினை அவர் வெளிப்படுத்தினார். பிரிட்டனில் நிலவும் தவிர்க்க முடியாத சூழலைப் புரிந்துகொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் , பிரிட்டனில் பரவும் பெருந்தொற்றை விரைவில் கட்டுப்படுத்தவும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்."

முன்னதாக, பிரிட்டனில் பரவும் புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.