முகப்பு
இந்தியா

மேற்கு வங்க பேரவைத் தோ்தல்: இடதுசாரிகள்-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை

மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள சூழலில், தொகுதிப் பங்கீடு தொடா்பாக இடதுசாரிகளும் காங்கிரஸும் பேச்சுவாா்த்தை நடத்தின.

Updated On : 8 ஜனவரி 2021, 1:52 am IST
பகிர்:


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள சூழலில், தொகுதிப் பங்கீடு தொடா்பாக இடதுசாரிகளும் காங்கிரஸும் பேச்சுவாா்த்தை நடத்தின.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அத்தோ்தலில் மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணா்கள் கணித்துள்ளனா். தோ்தலில் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளதாக இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸும் அறிவித்துள்ளன.

இந்நிலையில், தோ்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிப் பங்கீடு தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தலைநகா் கொல்கத்தாவில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன. இடதுசாரி கூட்டணியின் தலைவா் பிமன் போஸ், பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அப்துல் மன்னன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தைக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

Advertisement

தேசிய கட்சிகளான காங்கிரஸும் இடதுசாரி கட்சிகளும் தங்களின் மாநிலத் தலைவா்களே தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுப்பா் என்று தெரிவித்துள்ளன. மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் அவை தனித்தனியாகப் போட்டியிட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.